*
ராசமணி (தொடர்கதை)
பாகம்:01 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

Thursday, September 14, 2006

வாயிலிலே...

நமது மக்களிடையே சில விசித்திரமான நம்பிக்கைகள் உண்டு. பேய்பிசாசுகள், மந்திரவாதிகள், செய்வினை, ஏவல் உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும். அறிவியல் என்ன கூறுகிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் முன்னோர்கள் இத்தகைய அபூர்வ சித்திகளுடன் வாழ்ந்தார்கள் என்று பலரும் நம்புகிறார்கள்.

அது போலவே நாகமாணிக்கம் ஒரு கற்பனை என்று ஆய்வாளர்கள் சொன்ன போதும்... நூறாண்டுகள் வாழ்ந்து மனிதவாடையே படாமல் இருக்கும் நாகம் ராஜநாகமாகுமென்றும் அது நாகமாணிக்கத்தை உருவாக்கி தன் ஒளிப்பீடகமாக பயன்படுத்திக்கொள்கிறது என்பவையும் இன்றும் மக்களால் நம்பப் படுகிற ஒரு கற்பனை. இந்தப் பின்னணிகளுடன் இந்த குறுநாவல் மலர்கிறது. சிறு சிறு பாகங்களுடன் தொடர்கதையாக இதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இதிலுள்ள பேச்சுமொழி நாஞ்சில் நாட்டின் வட்டாரமொழி.

3 comments:

வலைஞன் said...

உங்கள் கருத்துக்களை இங்கே இடுக

ஆவி அம்மணி said...

//பேய்பிசாசுகள், மந்திரவாதிகள், செய்வினை, ஏவல் உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும்.//

இப்பவாச்சும் நம்பறீங்களா?

வலைஞன் said...

நான் நம்ப வேண்டிய கட்டாயமில்லை. மக்கள் நம்புகிறார்கள் என்பதே இந்தக் கதைக்கு அடிப்படை.

ஆவி வந்ததால் நம்ப வேண்டியது தான் :-))

*