*
ராசமணி (தொடர்கதை)
பாகம்:01 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

Thursday, September 21, 2006

நாகதோஷம் - ராசமணி- 11

அங்கே டாக்டர் தனியாக கேட்ட போது உண்மையை மறைக்காமல் சொன்னேன். ஆனா அந்த கிறுக்குப் புடிச்ச டாக்டர் என் சொந்தக்காரங்க கிட்ட எனக்கு பைத்தியம் முற்றி விட்டதாகச் சொல்லி ஆஸ்பத்திரியிலேயே வைத்துக்கொண்டார். பிறகு வேண்டிய மட்டும் பீஸ் கறந்து சில நாள் கழித்து பைத்தியம் தெளிந்ததாக வீட்டுக்கு அனுப்பினார்.

பிறகு ஒருநாள் பரிசோதிக்க வாறமாதிரி வீட்டுக்கு வந்து நாகமணியை விலைக்குக் கேட்டார். போடா என்று விரட்டி விட்டேன்.

நாகமணியை விக்க எனக்கு மனசு வரவில்லை. வழியும் தெரியவில்லை. அதை வைத்திருந்த இடத்தில் அடிக்கடி சோதித்தேன். பத்திரமாக இருந்தது.

ஒரு நாள் எனக்க மூத்த மகன் பாம்பு கடிச்சி செத்துப் போனான். அப்போது ஒரு பயம் வந்தது. பிறகு பெண்டாட்டிக்கு விஷக்கடி மாதிரி வந்து மேலேல்லாம் வீங்கியது. மருந்து கொடுத்தும் குணமாகவில்லை. அவள் கழுத்தில் சக்கரவர்த்தியின் படத்தில் இருந்தது போன்ற வளையம் இருந்தது. இது நாகதோஷம் என்று பலரும் சொன்னார்கள். நாகராஜனின் கோபம் தான் என்று எனக்குள் தோன்றியது. நாகர்கோவிலுக்குப் போய் நாகராஜா கோவிலில் நேர்ச்சை செய்துவிட்டு வந்தேன்.

அதே சமயம் வீட்டுக்குப் பின்பக்க விளையில ஒரு பாம்புப் புற்று உருவாச்சு. புற்றை அழிக்க நினைத்து பின் வேண்டாமென்று விட்டு விட்டேன்.

ஒரு நாள் ராவு உறங்க கிடந்த போது ஏதோ தோன்றியது. நாகரத்தினம் கைக்கு வந்த பிறகு நான் வேலைக்குப் போகவில்லை. வீட்டில் கஷ்டமும் தாரித்திரியமும். பயங்கர வறுமை. மூத்த மகன் இறந்து விட்டான். மனைவி நோயாளியானாள். நானும் பைத்தியம் என்று பேரெடுத்தேன். இன்னும் என்னென்னவோ பிரச்சினைகள். வாழ்க்கைல நிம்மதி என்பதே இல்லாம போச்சு.

(கதை வளரும்...)

4 comments:

வலைஞன் said...

அறிவிப்பு:

இந்தக் கதை அடுத்த பாகத்தில் நிறைவுறும்.

துளசி கோபால் said...

பயங்கர விறுவிறுப்பாப்போகுது.

பின்னூட்டம் இடலைன்னு நினைக்காதீங்க.

தவறாமப் படிச்சுக்கிட்டுத்தான் வாரேன்.

Anonymous said...

வலைஞன் , அருமையாக கொண்டு போறீங்க.

Anonymous said...

வலைஞன் அருமையாக கொண்டு போறீங்க.

முத்து

*