*
ராசமணி (தொடர்கதை)
பாகம்:01 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

Wednesday, September 27, 2006

நாகமாணிக்கம் - ராசமணி- 12

எல்லாம் யோசிச்சிப் பாத்தபோது பயங்கர குழப்பமும் கடைசியில ஏதோ ஒண்ணு தெளிஞ்சது போல இருந்தது. காலையில முதல் வேலையா மறைச்சு வெச்சிருந்த அபூர்வ நாகமாணிக்கத்தை எடுத்துக் கொண்டு போய் வீட்டுப் பின்பக்க விளையில் முளைச்சிருந்த பாம்புப் புத்தில் கொண்டு போய் போட்டேன்.

ஆச்சரியமாக சில நாளில் மனைவி குணமானாள். கூட்டுக்காற பனையேறிகள் பாண்டிக்கு பனையேறக் கூப்பிட்டார்கள். நானும் போனேன்.

வீட்டு நிலமை ஓரளவு சரியானது. இப்போ இளைய மகன் சவுதியில. மகளக் கட்டிக்கொடுத்தாச்சு. இப்போ சுக ஜீவிதம். சந்தோஷம்.

உள்ளூரில் பனையேற ஆளில்லாமல் பனையெல்லாம் வெட்டி வஸ்து உடையான்கள் தெங்கு நட்டினும். தெங்கெல்லாம் மாற்றி இப்பம் ரப்பர நடுனும். இப்பிடி காலம் மாறிப்போச்சு. நாமளும் மாறத்தானே வேணும்."

பழைய பனையேறி கதையை முடித்தார். அவர் சொல்வதில் உண்மை எத்தனை சதவீதம் என்று புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ரசமான ஒரு கதை கேட்ட திருப்தி எல்லாருக்கும் இருந்தது.

"அந்தப் புத்து இப்பவும் இருக்கா அம்மாவா" கூட்டத்தில் ஒருவன் ஆவலோடு கேட்டான்.

"இருக்கப்பி, இப்பம் அதில நாகப்பிரதிம வச்சு கும்பிடுறம்." என்று கிழவர் பதில் சொன்னார்.

பனையேறியின் வீரதீர சாகசக் கதை கேட்ட இளவட்டங்களுக்கு இன்னும் ஏதோ உறுத்தல் இருந்தது.

திடீரென நினைவு வந்த இளைய பெருமாள் "அக்கரக் காரன அடிக்கியதுக்கு களரி படிச்சியளே. அடியேதும் நடத்தினியளா?" என்று கேட்டான்.

"இல்ல பிள்ள! ஆசானுக்க கட்டளை...ஒரு அடிக்கிம் போகப்பிடாதுன்னு. அது மட்டுமில்ல.. யார அடிக்க நான் அடிவேல படிச்சனோ அவருக்க ஒடம்பிறப்பு தான் எனக்க பெண்டாட்டியா வந்தது. பெறகு மச்சினன்கூட எதுக்கு மல்லுக்கு நிக்கிறது? தங்கமான மனுசன்...நல்ல மருவாதி...கல்யாணத்துக்கு பெறகு எங்கள தங்கமா தாங்கறார். எங்க கஷ்ட காலத்திலெல்லாம் அவரு தான் உபகாரம் செய்தது."

"அவரு பாக்க வந்த இக்கரப் பொண்ணு.?"

"அந்தப் பெண்ணத்தான் அவரு கட்டினாரு. கல்யாணம் ஒரு பெரிய கொளப்பத்தோட தான் நடந்துது. அதும் ரசமான கத தான்."

"அதையும் சொல்லும்."

"பொறவு பாப்பம். இப்பம் நேரம் இருட்டிச்சி. நான் போறன்."

செல்வராசு மாலைப் பேப்பருடன் வந்தான். குளக்கரையில செத்துக் கிடந்தவனுக்க படத்தோட செய்தி வந்திருந்தது.

"பட்டணத்துல இருந்து மாடு வாங்க பணத்தோட வந்தவனை கூட வந்தவன் ஒருத்தன் குடிக்க வச்சு அடிச்சுப்போட்டு பணத்தோட ஓடிட்டானாம்."

லெச்சி அடிச்ச கதை இப்பிடி ஆண்டி கிளைமாக்சா ஆனதை களித்துச் சிரித்து இளைஞர் கூட்டம் கலைந்தது.

***

சில நாட்கள் கழித்து கிழவர் வீட்டுக் கொல்லைப்புறம் இருந்த நாகப்புற்று அடித்து உடைக்கப் பட்டுக் கிடந்தது. அருகில் ஒரு நாகப்பாம்பு செத்துக் கிடந்தது.

(நிறைவு!)

3 comments:

துளசி கோபால் said...

வலைஞரே,

நல்ல அருமையான நடை. வலிஞ்சு கட்டிய இலக்கியம்,இலக்கணம், வார்த்தை அலங்காரம்
எல்லாம் இல்லாம எளிமையா நீரோடை போல சலசலன்னு ஓடுது.
இப்பல்லாம் ஒருத்தர் எழுதனதை இன்னொருவர் களவாண்டு போட்டுக்கறங்கன்னு செய்தி
கேள்விப்படுறோம். அந்த ஆபத்தெல்லாம் 'நம்ம நடை'க்கு வராதுன்னு நம்புவோமாக:-)))

கிராமத்துப் பனையேறி இப்படித்தான் கதையைச் சொல்லி இருக்கோணும். சந்தேகமே இல்லை.
ஆனா கடைசியிலே யார் பாம்பைக் கொன்னு, புத்தையும் இடிச்சது? திடுக்குன்னு ஆகிப்போச்சு.
மாணிக்கம் களவெடுக்கத்தானே இது? ஆனா படிக்க விறுவிறுப்பா இருந்துச்சு.

குறைன்னு சொல்லணுமுன்னா...........

ரொம்பச் சின்னச் சின்ன பதிவுகளாப் போட்டுருக்கீங்க. இருந்து வாசிக்கிறவனுக்கு படிச்ச
திருப்தி வர்றதுக்குள்ளே 'பொடுக்'னு தொடரும் போட்டுட்டீங்க. இனி கொஞ்சம் நீளமான
பதிவாப் போடுங்களேன்.

இயல்பாக் கதை சொல்லும் திறன் இருக்கு. அதை இன்னும் வளர்த்துக்குங்க.

மொத்தத்துலெ நல்ல கதை.

Anonymous said...

nallaa uruthicgu valaigan. machaan kalyana kadhiyum solli podum

muthu

முகில் said...

கதை நல்ல விறுவிறுப்பா இருந்துது நண்பரே.

ஒரு எதிர்பாராத திருப்பம் வைத்து அழகாக முடித்திருக்கிறீர்கள். (நானும்தான் முயற்சிக்கிறேன்..கதைகளை வலுக்கட்டாயமா என்னிடம் இருந்து எழவைக்க முடிவதில்லை)

இன்னுமின்னும் எழுத வாழ்த்துக்கள்.

*